புதுச்சேரி: சாயிபாபா கோவில்களில் ஆராதனை விழா விமர்சையாக நடந்தது. புதுச்சேரி பிள்ளைச் சாவடியில் அரசு பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள சீரடி சாயிபாபா பிராத்தனை மண்டபத்தில் சீரடி சாயிபாபாவின் மகா சமாதி தினம் மற்றும் 96-வது ஆராதனை விழா நேற்று காலை 7:௦௦ மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணிக்கு சீரடி சாயி பாபா பல்லக்கில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலுார் நந்தகுமார், தர்மாபுரி ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜன்ஸ் நிகழ்ச்சி நடந்தது. லாஸ்பேட்டை சாயிபாபா கோவிலில் ஆராதனை விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்றனர்.