பதிவு செய்த நாள்
04
அக்
2014
02:10
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று விஜயதசமியை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் முருகப் பெருமான் ஆகிய சன்னிதிகளிலும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகளில் இருந்து சரவண பொய்கை வழியாக, கோவில் சுமைதாங்கிகள் ஊர்வலமாக இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள தாசிகுளம் வந்தடைந்தார். பின்னர், இரவு 7:00 மணிக்கு, அங்குள்ள மண்டபத்தில், உற்சவப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தியும், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, உற்சவப் பெருமானை, சுமைதாங்கிகளால், ம.பொ.சி., சாலை, நரசிம்மசுவாமி கோவில் தெரு, மடம் கிராமம் வழியாக மலைக் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.