வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா மும்மதத்தினர் பங்கேற்புடன் கோலாகலமாக துவங்கியது.வத்திராயிருப்பு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது இவ்விழா. மழைக்கு அதிபதியான முத்தாலம்மனுக்கு மக்கள் ஒருவாரகாலம் விழா எடுத்து வழிபடுவதும், இறுதி நாளில் தேரோட்டமும், அம்மன் கரைப்பும் நடைபெறுவதும் வழக்கம். இதன்மூலம் ஊர் செழிப்படையும் என்பது அனைத்து தரப்பினரின் நம்பிக்கை. இதன்படி இவ்விழா மும்மதத்தினர் பங்கேற்புடன் கோலாகலமாக அக்.,1ல் துவங்கியது. ஸ்ரீவி., டி.எஸ்.பி., முரளிதரன் தலைமை வகித்தார். காந்திய இயக்க தலைவர் கரம்சந்த் நல்லுசாமி வரவேற்றார். மதுரை பங்குத் தந்தை அந்தோணி பாக்கியம், டாக்டர் சையத்பாசுதீன் உட்பட பலர் வாழ்த்தினர். முன்னதாக ஜாதி,மத நல்லிணக்க உறுதிமொழிஏற்பு நடந்தது. அதைத்தொடர்ந்து கிராமிய தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது. பக்தசபா நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். அக்.,8ல் தேரோட்டம் நடக்கிறது.