சேத்தூர்: சொக்கநாதன்புத்தூர் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலில் புரட்டாசி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தினம் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அக்.,10 தேதி காலையில் நடைபெறுகிறது.
மேலூர் துரைச்சாமியாபுரம் பதிமூன்று சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன் கோயில் புரட்டாசி பூக்குழி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி <உலா வரும் நிகழ்ச்சி, இரவில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது. காப்பு கட்டிய பக்தர்கள் 9ம் நாளன்று மாலையில் பூ இறங்கி நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.