ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மூன்றாம் ஞாயிறு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2014 11:10
மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையொட்டி, நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் ஞாயி ற்றுக்கிழமையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.