பதிவு செய்த நாள்
06
அக்
2014
11:10
ஷீரடி :ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, கடந்த மூன்று நாட்களில், 4.10 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த, 3ம் தேதி நடந்த தசரா விழா அன்று, சாய்பாபாவின், 96வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதையடுத்து, கோவிலுக்கு வழக்கத்தை விட, பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள், பணம், தங்கம், வெள்ளி நகைகளை, காணிக்கையாகச் செலுத்தினர். கடந்த மூன்று நாட்களில், பக்தர்கள், பணம், நகைகள் அனைத்தும் சேர்த்து, மொத்தம், 4 கோடியே, 10 லட்சத்து, 77 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.