காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனியை முன்னிட்டு கருட சேவை நடந் தது. அதனையொட்டி காலை 8 மணிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள், கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். மாலை குதிரை வாகனத்தில் பெருமாள் சென்று அம்பு போடும் நிகழ்வு நடந்தது.