திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தி ல் தீபாராத னை நடந்தது. மாலை 7:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். உற்சவதாரர் திண்டிவனம் திருவள்ளுவர் நகர் கோபி குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.