பொதட்டூர்பேட்டை : ஸ்ரீதேவி பூதேவி உடனுறை காளிங்கவராக சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழாவில், இன்று கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். பொதட்டூர்பேட்டை அடுத்த, மேல்பொதட்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை காளிங்கவராக சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் சுவாமி சேஷ வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார்.இன்று மாலை உற்சவத்தின் சிறப்பு அம்சமான கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். நாளை மாலை அனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. நாளை மறுதினம் மாலை திருக்கல்யாண உற்சவத்துடன், பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.