தமிழ்த் தெய்வமான முருகனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏழு பழமொழிகள் உள்ளன. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை. வடிவேல் அறிய வஞ்சகம் இல்லை.சிந்தை நொந்தவனுக்குக் கந்தனே துணை.வழிக்குத் துணை வடிவேல்.கலிக்கும்(வறுமை) கிலிக்கும்(பயம்) கந்தனை எண்ணு.கேளற்றவர்க்கு வேள் (கேட்பாரற்றவனுக்கு கந்தனே துணை) காக்க காக்க கனகவேல் காக்க! இந்தப் பழமொழிகளின் அடிப்படையில் தான், நக்கீரர்,நாளென் செயும் வினை தான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்கொடுங்கூற்று என் செயும்- குமரேசர்இருதாளும் தப்பாமல் சார்வார் தமக்கே! என நவக்கிரகங்கள், எமன், முன்வினை என எதனாலும், முருகனின் அடியவனான தன்னை நெருங்க முடியாது என சவால் விடுகிறார்.