சுபவிஷயத்தில் வலக்கை, வலக்கால் இரண்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடது கை, காலுக்குக் கொடுப்பதில்லை. இயற்கையாகிய உலகமே வலமாகத் தான் சுழல்கிறது. எல்லா மந்திரங்களின் மூலமாகிய பிரணவம் (ஓம்) வலமாகத் தான் சுழிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், வலப்பாகத்தை மங்களத்தின் சின்னமாகச் சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அதற்காக இடது கை, கால்களைக் கட்டிப் போட்டு விட வேண்டும் என்பதில்லை. அவைகளும் இணைந்து செயல்பட்டால் தான் மனிதனால் இயங்கவே முடியும். அதேநேரம், இடது கையால் செய்ய வேண்டிய வேலைகளை வலக்கையால் செய்ய ஆசைப்பட மாட்டோம் அல்லவா? இன்னின்ன வேலையை இப்படித் தான்செய்ய வேண்டும் என, காலம் காலமாக ஒரு நியதியைப் பின்பற்றுகிறோம். இதை புறக்கணிக்கக் கூடாது என்பதால், மங்கள நிகழ்ச்சிகளுக்கு வலது கையைப் பயன்படுத்துகிறோம். இறைவனுக்கு பூ சாத்தும் போது, ஒரே கையால் சாத்த முடியாது. எனவே செய்கிற வேலையைப் பொறுத்து கைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.