திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்ரோத்சவ விழாவில் ஹோமங்கள் நடந்தன. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று பிரதான ஹோமங்கள் நடந்தன. காலை 5.30 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், ஏகாதசி மண்டபத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், புஷ்பவள்ளி தாயார், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் எழுந்தருளி யாக சாலை பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து புண்யாக வாசம், சுதர்சன ÷ ஹாமம், மகா சாந்தி ஹோமம், வேத பிரபந்த சேவாகாலம், பகல் 12.00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. நாளை (9ம் தேதி) மாலை 5 மணிக்கு சுவாமிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று சூரிய கிரகனத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கோவில் நடை சாற்றப்பட்டு மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை திறக்கப்படுகிறது.