பதிவு செய்த நாள்
08
அக்
2014
11:10
பொதட்டூர்பேட்டை: புரட்டாசி பிரம்மோற்சவத்தில் பூவராக சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பொதட்டூர்பேட்டை அடுத்த, மேல்பொதட்டூர் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 4ம் தேதி, புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்து வருகிறது. 5ம் தேதி மாலை, ஆதிசேஷ வாகனத்திலும், மறுநாள் அனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். நேற்று முன்தினம், பிரம்மோற்சவத்தின் சிறப்பு உற்சவமான கருட சேவை நடந்தது. இரவு 7:00 மணியளவில், கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பட்டார். இதில், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று, ஸ்ரீதேவி, பூதேவி, பூவராக சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.