திரிபுர அசுரர்களை அழிக்கச் சென்ற சிவன் தன்னிடம் ஆயுதங்கள் பல இருந்தாலும் அவனுடன் போரிட விரும்பவில்லை. மாறாக அமைதியுடன் அவர்களை பார்த்த லேசாக புன்னகைத்தார். அவரது புன்சிரிப்பிலேயே அசுரர்கள் எரிந்து சாம்பலாயினர். அசுரனை கொன்று தேவர்களை காத்த மகிழ்ச்சியில் திளைத்தார் சிவன். அப்போது அவரது சிரிப்புஎரியும் தீபத்தின் சுடர் போல் பிரகாசமான ஒளியை உடையதாக இருந்ததாம். சிவனின் மகிழ்ச்சியான அந்த தருணத்தை நினைவு கூறும் விதமாக தீபங்கள் ஏற்றுகிறோம். தீபத்தில் எரியும் சுடர் சிவனின் சிரித்த வடிவமாகவும், பரவியிருக்கும் ஒளி அவரது சிரிப்பின் தன்மையாகவும் இருக்கிறது. சிவன் அசுரர்களை அழித்த நாளே கார்த்திகை திருநாளக கருதப்படுகிறது.