சென்னை அருகிலுள்ள திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஒற்றை பாதத்துடன் கூடிய சிவனை கோஷ்டத்தில் பார்க்கலாம். இவரை ஏகபாத மூர்த்தி என்பர். மதுரை மீனாட்சி கோயில் புதுமண்டபத்திலும் இவரைக் காணலாம். ஒற்றைக் காலுடன் நிற்பது எவ்வளவு சிரமமோ, அதுபோல் இறைவனை அடையவும் மிகுந்த சிரமப்பட வேண்டும் என்பதை இந்தக்கோலம் எடுத்துக்காட்டுகிறது.