திருத்தணி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி உத்தரவின் பேரில், நேற்று, மலைக்கோவிலில் உள்ள சண்முகர் பெருமானுக்கு 364 அர்ச்சனைகள் நடந்தன. வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கடைகளையும் அடைத்தனர். நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.