வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு, கடந்த, 3ம் தேதி முதல், 7ம் தேதி வரை லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. நிறைவு நாளில், துர்க்கையம்மனுக்கு சண்டி ஹோமம் நடந்தது இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து அம்மனை வழிபட்டனர்.