பதிவு செய்த நாள்
14
அக்
2014
11:10
சிதம்பரம்: கடலூர் மாவட்ட சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் நந்தனார் ஐக்கியமான திருநாள் குருபூஜை விழா சிதம்பரம் ஓமக்குளம் சிவலோகநாதர் கோவில் நந்தனார் சுவாமி மடத்தில் நடந்தது. இதனையொட்டி நந்தனார் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடல்கள் பாடி குரு பூஜை சிறப்பு வழிபாடுகளை மடாதிபதி பழனிவேல் முன்னிலையில் பூசாரி குழந்தைவேல் செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்கத் தலைவர் டாக்டர் சங்கரன் தலைமை தாங்கினார். இதில் பொறுப்பு செயலர் ஜெயச்சந்திரன், கல்விக் கழக நிர்வாகிகள் தாமோதரன், ராமநாதன், மணி வேல், பாலையா, வி.சி., மாவட்டச் செயலர் செல்லப்பா, மா.கம்யூ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் வாஞ்சிநாதன், கற்பனைச்செல்வன், பன்னீர்செல்வம், கங்காதரன், தொழிலதிபர் மணிரத்தினம், அன்பழகன், கலியமூர்த்தி, நமச்சிவாயம், ராமச்சந்திரன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நந்தனார் ஆய்வு மையம் மற்றும் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் நடந்த குருபூஜையில் கல்விக்கழகச் செயலர் ஜெயச்ச ந்திரன் தலைமை தாங்கினார். நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் காவியச்செல்வன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆய்வு மைய நிர்வாகிகள் ஞான÷ சகரன், குறிஞ்சிவளவன், சிற்றரசு, விஜயபாஸ்கர், செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.