வழிவிடு முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்.,24 ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2014 12:10
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 24 காலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. அக்., 29 இரவு சூரசம்ஹாரம், அக்., 30 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. பெருவயல் ரணபலி முருகன் கோயில் கந்தசஷ்டி விழா அக்., 24 ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் சுவாமி உலா நடக்கிறது. அக்., 29 ல் சூரசம்ஹாரம், அக்.,30 ல் திருக்கல்யாணம் நடக்கிறது.