காசியிலுள்ள பழமையான அன்னபூரணி அம்மன் கோயிலிலுள்ள விக்ரகம் சொக்கத் தங்கத்தால் ஆனது. தீபாவளியன்று மட்டுமே சந்நிதிக் கதவைத் திறந்து வைத்து, முழுமையாகத் தரிசிக்க வகை செய்வார்கள். அம்பாளின் லட்டுத்தேர் பவனியும் உண்டு. மற்ற நாட்களில் கருவறைக் கதவின்துவாரம் வழியாக மட்டுமே தரிசிக்கலாம். தீபாவளியன்றும் அதனைத் தொடர்ந்த மறுநாளும் இந்த சந்நிதி முழுவதும் இனிப்பு வகைகளால் நிரப்பப்படும். வழிபாட்டிற்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்லோகத்தில், பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேஸ்வரீ என்று வேண்டுகிறார். கருணை என்னும் கொடி பற்றிப் படர கொழுகொம்பாக இருக்கும் அன்னபூரணி தாயே! எனக்குபிச்சையிடுவாயாக என்பது இதன் பொருள்.