கந்தபுராணத்தில் திருத்தணியின் சிறப்பு பற்றி சொல்லப் பட்டுள்ளது. நமது இடத்தில் இருந்தபடியே திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும்,நினைத்தாலும், அது இருக்கும் திசைநோக்கிவணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு, முருகனே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்றஅடியார் முத்துசுவாமி தீட்சிதர். 19ம் நுõற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது முருகன் சிறுவனாய் முத்துச்சுவாமி தீட்சிதரின் முன் தோன்றி, அவருக்கு கல்கண்டு கொடுத்து இசைபாடும் திறமையை வழங்கினார். நாமும் முருகனையே நம் குருவாக ஏற்கலாம். பக்தர்கள் வாழ்வில் ஒருமுறையாவது திருத்தணி சென்று வருவது பிறப்பற்ற நிலையை அடைய வழி வகுக்கும்.