ஆர்.கே.பேட்டை : சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா ஜாமினில் வெளியானதையடுத்து, அ.தி.மு.க.,வினர் நேற்று, தேசம்மனுக்கு சங்காபிஷேகம் நடத்தினர்.இதையடுத்து, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வினர், நேற்று, குளக்கரை தேசம்மனுக்கு சங்காபிஷேகம் நடத்தினர். இதில், ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயவேலு, முன்னாள் தலைவர் தர்மன், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.