கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி பின்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், சாமிக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேகங்கள் நடந்தது. கோவிலில் உள்ள பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டி வழிபட்டனர்.