பதிவு செய்த நாள்
24
அக்
2014
02:10
சென்னை : சென்னையில் உள்ள அனைத்து சிவாலயங்கள், முருகன் கோவில்களில், இன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது. மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவான்மியூர் மருந்தீசுவரர், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியர் கோவில், பாரிமுனை கந்தகோட்டம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, குன்றத்துார் முருகன் கோவில்கள் உள்ளிட்ட சென்னையின் அனைத்து சிவாலயங்கள், முருகன் கோவில்களில், இன்று முதல் கந்த சஷ்டி விரதம் துவங்குகிறது.ஆறாம் நாளான வரும், 29ம் தேதி, சூர சம்ஹாரம் நடைபெறும். ஏழாம் நாளில், முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.