பதிவு செய்த நாள்
24
அக்
2014
02:10
பெங்களூரு பாஷ்யம் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று முதல், வரும் 29ம் தேதி வரை, கந்தசஷ்டி திருவிழா நடக்கிறது. இன்று முதல், காலை, 9:30 மணிக்கு, சத்ரு சம்ஹார யோகம், 11:00 மணிக்கு, அபிஷேகம், பகல், 12:00 மணிக்கு, மஹா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், இரவு, 7:00 மணிக்கு, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. 8:30 மணிக்கு, மஹா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. வரும் 29ம் தேதி, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம், மாலை, 5:00 மணியிலிருந்து 8:00 மணி வரை, கர்நாடகா திருப்புகழ் பஜனை குழுவினரின், பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 6ம் தேதி, சிவபெருமானுக்கு, அன்னாபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அருணாச்சலேஸ்வரருக்கு அன்ன அலங்காரம் செய்யப்படுகிறது. 7:00 மணிக்கு, மஹா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. சிவசுப்ரமணிய சுவாமி காமராஜர் ரோடு, வள்ளி - தேவசேனா சமேத ஷடாக்ர ஞான சிவ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை, சூரசம்ஹாரம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, காலையில் கேதார கவுரி கலசஸ்தாபனம், இரவில் மகா கணபதி உற்சவம் நடந்தது. இன்று மாலை, 6:30 மணிக்கு, சிவ சுப்ரமணியர் உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு, நாக வாகன உற்சவமும், 26ம் தேதி, மயில் வாகன உற்சவமும் நடக்கும். 29ம் தேதி, காலை, 9:?? மணிக்கு, சண்முகர் மகா அபிஷேகமும், பகல், 12:?? மணிக்கு, தீபாராதனை, மாலை, 6:30 மணிக்கு, சூரசம்ஹாரமும் நடக்கிறது.