ஏழு மோட்சபுரிகளில்முதன்மையாக விளங்குவது காசி. காசி என்ற சொல்லுக்கு மகாபிரகாசம், பேரொளி என்று பொருள். இங்கு ஓடும் கங்கையில் நீராடினால் பாவம் நீங்கி பிறவிப்பிணி தீரும். இங்கு சிவனும், பார்வதியும் விஸ்வநாதர்-விசலாட்சி என்ற பெயரில் கோயில் கொண்டு உள்ளனர். ஜீவன்களுக்கு உயிர் பிரியும் வேளையில் விசாலாட்சி, தன் மடி மீது கிடத்தி முந்தானையால் வீசுவதாக ஐதீகம். விசாலாட்சிஎன்பதற்கு விசாலமான கண்களைக் கொண்டவள் என்று பொருள் உண்டு. பார்வையாலேயே உலகை ஆள்பவள் என்பதால், இவ்வாறு சொல்வர்.