ராஜகுமாரியாக விளங்கும் பார்வதிக்கு உமா என்று ஒரு பெயருண்டு.உமையவள் என்றும் சொல்வர். உமா என்பதை சக்தி பிரணவ மந்திரம்என்று சாஸ்திரம் கூறுகிறது.தேவிக்குரிய மூலமந்திரமாக இருப்பது ஓம் உமாதேவ்யை நம:. ஓம் என்னும் பிரணவத்தில் இருப்பதுபோல, அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்றும் உமா என்ற 2 எழுத்து மந்திரத்தில் உள்ளது.இதை ஜெபித்தால் எதையும்சாதிக்கும் வல்லமைஏற்படும் என்பது ஐதீகம்.