பராசக்தியின் புகழ்பாடும் நுõல்களில் தலைசிறந்து விளங்குவது லலிதா சகஸ்ரநாமம். பிரம்மாண்ட புராணத்தில் லலிதா பாக்கியானம் என்னும் பகுதியில் இது இடம்பெற்றுள்ளது. வாக்தேவதை என்னும் எட்டுதேவதைகளால் தொகுக்கப்பட்ட அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களே லலிதா சகஸ்ரநாமம் ஆகும். திருமாலின் அவதாரங்களில் ஒருவரான விளங்கும் கல்விக்கடவுள் ஹயக்ரீவர் இந்த திருநாமங்களை அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்தார். இம்மை, மறுமை இரண்டுக்கும் நன்மை அளிக்கும் மகிமை இதற்கு உண்டு. செவ்வாய், வெள்ளியில் இதனை ஜபித்தால் அம்பிகையின் அருள் பூரணமாக கிடைக்கும்.