பதிவு செய்த நாள்
28
அக்
2014
11:10
துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் கரட்டு மலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், 32 அடி உயர முருகன் சிலை ஸ்தாபிக்கப்பட்டு நவம்பர், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்ப ாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலையில் உள்ள முருகன் சிலை போல், கரட்டு மலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலிலும் சிலை அமைக்க, ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழுவினர், ஹிந்து அற நிலையத்துறை கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, சிலை அமைக்கும் பணியை துவக்கினர். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 32 அடி உயரத்தில் கம்பீரமாக அமைந்துள்ள முருகன் சிலை, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சுதை வண்ணம் பூச்சு வேலைகளை, துறையூர் தனபால் ஸ்தபதி செய்கிறார். மலேசிய முருகன் சிலையுடன் கோவிலில் உள்ள மகாகணபதி, பாலதண்டாயுதபாணி, ஐயப்பன், நவகிரகங்கள், நாகதேவதை கோவில்களை புதுப்பித்து நவம்பர், 12ம் தேதி காலை, 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் தக்கார் ரத்தினவேல்பாண்டியன், செயல்அலுவலர் மகேந்திரபூபதி, சிலை அமைப்பு குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.