பதிவு செய்த நாள்
28
அக்
2014
11:10
சென்னை : மேற்கு மாம்பலம் அருகே, 20 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் வடமதுரா கண்ணன் கோவிலை விரைவில் திறந்து அன்றாட பூஜைகளை நடத்த வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு மாம்பலம் ஏரிக்கரையில், வடமதுரா கண்ணன் கோவில் அமைந்துள்ளது. தேனாம்பேட்டை பாலசுப்ரமணியர் கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவில் ௨௦ ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது. இதனால், பக்தர்கள், வழிபடவோ, விழா நடத்தவோ, முடியாமல் கவலையடைந்து உள்ளனர். கோவிலை திறக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிலை திறப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம், வடமதுரா கோவில் சிலை, தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவிலில் உள்ளது என்றார்.