பதிவு செய்த நாள்
30
அக்
2014
02:10
காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி வீதி உலா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 12 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. மாலை 4 மணிக்கு சண்முகநாத பெருமான், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வேலுடன் வாகனங்கள் அணி வகுக்க திருவீதி உலா வந்தார். பாதரக்குடி கிராமத்தினர் மயில்வாகனத்தையும், சின்ன குன்றக்குடி கிராமத்தினர் ஆட்டுக்கிடா வாகனத்தையும், கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர்கள் குதிரைவாகனத்தையும், கே.ஆத்தங்குடியை சேர்ந்தவர்கள் மூஞ்சுறு வாகனத்தையும், பலவான்குடியிருப்பை சேர்ந்தவர்கள் யானை வாகனத்தையும் தூக்கி சென்றனர். குன்றக்குடி அமரம் வகையினர் சூரனை தூக்கி ஆடி வந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், சன்னதி வாசல் அருகே சூரனை சண்முகநாத பெருமான் வதம் செய்தார். வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானையுடன் நகர்வலம் வந்தார். ஏற்பாடுகளை பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார். இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
* சிங்கம்புணரி வேட்டையன்பட்டி, காமாட்சி-பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பாலதண்டாயுத பாணிகோயிலில் கந்தசஷ்டிவிழா கடந்த 24 ந்தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.பக்தர்கள் சஷ்டி விரதமிருந்தனர்.நேற்று யாகசாலை பூஜை,ஆராதனை நடந்தது.சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது.
* திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.24ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை முருகனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.நேற்று பகல் 11 மணிக்கு துவங்கிய சண்முகா அர்ச்சனை பகல் ஒரு மணிக்கு நிறைவடைந்தது. பின்னர், முருகனுக்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. மாலையில் முருகன் திருநாள் மண்டபத்திலிருந்து, அம்பாள் சன்னதி எழுந்தருளினார். சிவகாமி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்த பின்னர், முருகன் அம்பாளிடம் வேல் வாங்குதல் நடைபெற்றது.தொடர்ந்து தேரடித் தெருவில் எழுந்தருளிய முருகன், அங்கு யானை,சிங்க,ஆடு முகங்களோடு வந்த சூரனை எதிர்கொண்டு சூரசம்ஹாரம் செய்தார்.இன்று காலை 7 மணி சிறப்பு அபிஷேகம், காலை 10.35 மணிக்கு திருக்கல்யாணமும் ந டைபெறும்.