ஆர்.கே.பேட்டை: ராஜாநகரம், எல்லையம்மன் கோவிலில், நவசக்தியம்மன் மற்றும் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. நாளை புதிய சிலைகள் கரிக்கோலத்தில் வருகின்றன. ராஜாநகரம் கிராமத்தில் உள்ள எல்லம்மன் கோவிலில், நவசக்தியம்மன் மற்றும் அய்யப்ப சுவாமி சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. புதிய சிலைகள் கரிக்கோல ஊர்வலம் மற்றும் யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகின்றன. தொடர்ந்து, நாளை மறுதினம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 7:30 மணிக்கு, புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளன. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, எல்லையம்மன், வாணவேடிக்கையுடன் வீதியுலா எழுந்தருளுகிறார்.