பதிவு செய்த நாள்
03
நவ
2014
11:11
ஆர்.கே.பேட்டை: வங்கனுார், திரவுபதியம்மன் கோவிலில், காசி விஸ்வநாதர் தரிசனம், தியான பயிற்சி, ஆன்மிக புத்தக கண்காட்சி நடைபெற்றது. வங்கனுார், திரவுபதியம்மன் கோவிலில், காசி விஸ்வநாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, தியான பயிற்சியும், ஆன்மிக புத்தக கண்காட்சியும், கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், நடைபெற்ற கண்காட்சியில் இடம் பெற்றுள்ள, தியானம் குறித்த படங்கள், பகுதிவாசிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோவில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தியான மண்டபமும் தனியே நிர்மாணம் செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது.