புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும் 9ம் தேதி, நவக்கிரக ஹோமம் நடக்கிறது. புதுச்சேரி சின்னசுப்ரா யப் பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நவக்கிரக ஹோமம் நடக்கிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறவும், சகலதோ ஷங்கள் நீங்கவும் நடத்தப்படும் இந்த ஹோமங்கள், 9ம் தேதி மாலை துவங்கி, 10ம் தேதி காலை சங்கடஹர சதுர்த்தி அன்று, பூர்ணாஹூதியோடு நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழு தலைவர் விஜயகுமார் மற் றும் நிர்வாகிகள், செயல் அதிகாரி ஜனார்த்தனன் செய்துள்ளனர்.