பதிவு செய்த நாள்
08
நவ
2014
11:11
திருப்பதி: திருமலையில், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு இணைந்து வருவதால், அன்றைய தினம், அனைத்து விதமான முன்பதிவு டிக்கெட்களையும் ரத்து செய்வது குறித்து, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. திருமலை அன்னமையா பவனில், நேற்று காலை, மாதம்தோறும், முதல் வெள்ளிக்கிழமையில் நடக்கும், தொலைபேசி மூலம் பக்தர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.தேவஸ்தான செயல் அதிகாரி கோபால் மேலும் கூறுகையில், ”வி.ஐ.பி., டிக்கெட் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு, தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,” என்றார்.