விருத்தாசலம்: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் அன்ன அபிஷேக விழா நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை விருத்தகிரீஸ்வரர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந் தது. 11:30 மணிக்கு பெரியநாயகர் சன்னதியில் 108 கலச பூஜை, மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு அன்னாபிஷேகத்தில் விருத்தகிரீஸ்வரர் அருள்பாலித்தார்.
கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர் கோவிலில் காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சி றப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஆலிச்சிகுடி சண்முக திருவரங்கநாயகி, பழனி வைத்தியநாதன் ஓதுவார் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு காய்கறி, பழங்கள், பூக்களால் அலங்கரித்த ஏகநாயகருக்கு மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கொளஞ்சியப்பர் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்தார். மணவாளநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சின்னப்பரூர் திரு நடம்புரீஸ்வரர் கோவில்களில் அன்ன அபிஷேகம் நடந்தது.