மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் ஆலய வளாகத்தில் உள்ள முகிலேஷ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடந் தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பாலம்பிகை சமதே முகிலேஷ்வரருக்கு நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், கலசப் பூஜை நடத்தப்பட்டன. மாலை 7 மணிக்கு முகிலேஷ்வரருக்கு காய்கள், பழங்கள், அன்னத்தால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.