மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில், ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா நடந்தது. தாய்கிராமமான தேவன்குறிச்சி உட்பட ௬ கிராமங்களை சேர்ந்தவர்கள், சப்பரங்களை சுமந்து வந்து, வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதுபோல் அடுத்த திருவிழா ௨௦௧௬ ஐப்பசி மாதம் நடைபெறும் என ஏழூர் தலைவர் ரகோத்தமன்ராவ், செயலாளர் சம்பத் தெரிவித்தனர்.