திண்டுக்கல் அருகேயுள்ள திருமலைக்கேணி தலத்தில் முருகன் விக்ரகத்தின் கீழ் துவாரம் இருக்கும். அதனுள்ளும் ஒரு தண்டபாணி மூர்த்தம் உள்ளது. எனவே இங்கு இரண்டு தண்டபாணிகளை தரிசிக்கலாம். இங்குள்ள வள்ளி சுனை நீர் எந்நேரமும் வெந்நீராகவும், தெய்வானை சுனை நீர் இரவு, பகல் எப்போதும் குளிர்ந்தும் இருக்கும்.