அரசன் தன் பாவம் தீர காளத்தீஸ்வரருக்கு மேற்கே ஒரு லிங்கம் அமைத்து வணங்கினார். இன்று அந்த லிங்கம் மிருத்யுஞ்ஜய லிங்கம் எனப்படுகிறது. இந்த லிங்கத்தை கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் வழிபடுவோருக்கு, அவர் வேண்டிய வரம் அப்படியே கிடைக்குமென்பது ஐதிகம். பஞ்சம் ஏற்படும் காலங்களில் இந்த மிருத்யுஞ்ஜய லிங்க வாயிலை சுவர் எழுப்பி அடைத்து, லிங்கம் மூழ்கும் வரை நீர் நிரப்பி வழிபட்டால் வேண்டிய மழை பெய்து பஞ்சம் நீங்கும்.