பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
திருச்செங்கோடு : திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், விமான பாலாய பூஜை நடந்தது. செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் உள்ளிட்ட ஸ்வாமிகளுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரத்துடன் ஓத,விமான பாலாயம் நடந்தது.கடந்த, 2012ல் ஒன்பது லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயில், வடக்கு வாசல் ராஜகோபுரம், நான்கு லட்சம் ரூபாயில், அர்த்தநாரீஸ்வரர் சன்னதி, ஐந்து லட்சம் ரூபாயில், செங்கோட்டுவேலவர் சன்னதி, மூன்று லட்சம் ரூபாயில், ஆதிகேசவ பெருமாள் சன்னதி, நான்கு லட்சத்து, 25ஆயிரம் ரூபாயில், மேற்கு வாசல் கோபுரம், இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயில், நாகேஸ்வரர் சன்னதி,ஏழு லட்சம் ரூபாயில், பரிவார சன்னதி திருப்பணி மற்றும் விமானம் புதுப்பித்தல், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாயில், மல்லிகார்ஜீனர் மற்றும் மல்லீஸ்வரர் கோவில் புதுப்பித்தல், 90 ஆயிரம் ரூபாயில், மலைக்கோவில் வெளிபிரகார மதிற்சுவர்கள் பராமரித்தல், இரண்டு லட்சத்து, பத்தாயிரம் ரூபாயில், சமயகுறவர்கள் நால்வர் சன்னதி புதுப்பித்தல், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், பஞ்சமூர்த்திகள் மேல்தளம் பராமரித்தல் என ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிக்காக, பாலாலயம் நடந்தது.உதவி கமிஷனர் சூரியநாரயணன், நகராட்சி சேர்மன் சரஸ்வதி, மாவட்ட திட்டகுழு உறுப்பினர் முருகேசன், நகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.