திருத்தணி: சுந்தர விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.