பதிவு செய்த நாள்
12
நவ
2014
12:11
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே நடக்கும் சிவன் கோவில் புனரமைப்பு பணிகளை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டார். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாரங்கியூர் தென்பெண்ணையாற்றின் ஓரம் கி.பி.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும், பராமரிப்பின்றியும் சிதிலமடைந்தது. கிராமமக்கள் முயற்சியால் கடந்தாண்டு கோவில் இடிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியை திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் பார்வையிட்டார். பின், மக்களுடன் ஆலோசனை நடத்தி, முதற்கட்டமாக எம்.எல்.ஏ., நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்து தருவதாக கூறினார். தே.மு.தி.க., நிர்வாகிகள் உமாசங்கர், முருகதாஸ், ராமச்சந்திரன், காமராஜ், வெங்கட், ஞானவேல், பாலு, ராகவன், அசேன்ஷரீப், கரிகாலன், குப்பன், இளங்கோ, இந்திரகுமார், ஏழுமலை, சுரேஷ், பாலமுருகன், கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.