பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 96வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2014 12:11
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 96ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30ம் தேதியும், டிச., 1ம் தேதியும் ஆசிரம வளாகத்தில் நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 30ம் தேதி காலை 6.30 மணிக்கு பிரதான் மந்திரில் ஹோமம், 10.30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4.00 மணிக்கு முகிலன் உருவாக்கிய பகவானின் வீடியோ பதிவுகள் காட்சிப் படுத்தப்படுகிறது. 6.15 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. டிச., 1ம் தேதி காலை 7.00 மணிக்கு பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கிறது. 11.00 மணிக்கு விழா அரங்கில் பக்தர்கள் பஜனை, மாலை 4.00 மணிக்கு சென்னை சற்குருநாத ஓதுவாரின் தேவாரம். 6.00 மணிக்கு ஸ்ரீமதி பங்கஜம் தாஸ் குழுவினரின் இன்னிசை, இரவு 7.45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆசிரம தலைவர் ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.