கீழக்கரை: உத்திரகோசமங்கையில் உள்ள வராகி மங்கை மாகாளியம்மன் கோயில் முளைக்கொட்டு விழா நடந்தது. காப்புகட்டுதலுடன் துவங்கி தினமும் கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியடித்தல் நடந்தது. மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலா வந்த கரகம், முளைப்பாரி, சீதைப்புனல் ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.