பதிவு செய்த நாள்
15
நவ
2014
12:11
பழநி: கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் காரணமாக பழநியில் துளசி மாலை, பூஜைப் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. விலையும் அதிகரித்துள்ளது.கார்த்திகைமாத பிறப்பை முன்னிட்டு பழநிகோயிலுக்கு கர்நாடகா, ஆந்திரா <உள்ளிட்ட வெளிமாநில ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மாலை அணிவதற்கான பிரத்யேக பொருட்களான சுவாமி சிலைகள், விசேஷ துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம், சந்தன மாலைகள், வாங்கிச் செல்வதில் வெளிமாநில பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாண்டு ஸ்படிகம், துளசி மாலைகளின் விலை முன்பிருந்ததை விட ரூ.20 அதிகரித்துள்ளது. பழநி வியாபாரி மனோகர் கூறுகையில், ""கார்த்திகை மாதம் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ரூ.70 முதல் 150 வரை துளசி மணிமாலையும், ரூ.300 முதல் 1500 வரை ஸ்படிகம், நவகண்டிமாலை மற்றும் சுவாமி சிலைகள், பூஜை பொருட்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இவ்வாண்டு புதிய வரவாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 5 முகம் கொண்ட பெரிய ருத்ராட்ச மாலை ஹரித்துவாரிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், காசி உள்ளிட்ட இடங்களிலிருந்து மாலைகள் வந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது, என்றார்.