திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் 20க்கும் மேற்பட்டோர் உழவாரப் பணிகளை செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சேலம் அருணை உழவாரப் பணிக் குழுவினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். தேவார பாடல் பெற்ற பழைய கோவில்களில் உழவாரப்பணி செய்யும் குழுவினர் மாதம்தோறும் ஒரு கோவிலை தேர்வு செய்து துப்புரவு பணிகளை செய்கின்றனர். கடந்த இரு மாதங்களாக விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர், திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிகளை செய்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:00 மணிக்கு திருவெண்ணெய் நல்லூரில் பணிகளை செய்தனர். ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் முத்துக்குமார் செய்திருந்தனர்.