சண்டிகேஸ்வரர் சிவதியானத்தில் எப்போதும் ஆழ்ந்திருப்பவர். சிவனுக்கு அபிஷேகம் செய்த நிர்மால்ய தீர்த்தத்தின் அருகில் இவர் சந்நிதி இருக்கும். இவரை கவனத்தை நம் பக்கம் திருப்புவதற்காக கைதட்டும் வழக்கம் உண்டாகி விட்டது. வழக்கம் போல கை குவித்து வணங்கினாலே போதுமானது. கைதட்டுவது, உடுத்திய ஆடையில் நுõல் எடுத்து போடுவது போன்றவை எல்லாம் கூடாது.