பதிவு செய்த நாள்
25
நவ
2014
12:11
செங்கல்பட்டு: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை பெறக்கோரி, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 108 பால் குட அபிஷேகம், நேற்று, நடந்தது. சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த செப்., ௨௭ம் தேதி, 100 கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா ஜாமினில் வெளியில் வந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க., பாசறை சார்பில், ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெறக் கோரியும், மீண்டும் முதல்வராக வேண்டி நேற்று, செங்கல்பட்டு, அண்ணாசாலையில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், கோவில் வளாகத்திலிருந்து, மாவட்ட செயலர் குமாரசாமி தலைமையில், 108 பேர் பால் குடம் எடுத்து கொண்டு, கோமாதாவுடன் ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று, ராஜாஜி தெருவில் உள்ள ஏகாம்பரேஷ்வரர் கோவில் அருகில் முடிந்தது. அதை தொடர்ந்து, ஏகாம்பரேஷ்வரருக்கு, 108 பால் குட அபிஷேகம் நடந்தது. இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.