பெருவழிப்பாதையில் நடந்து வருபவர்களும், எருமேலியில் இருந்து பஸ்சில் வருபவர்களும் பம்பையில் கூடுகின்றனர். இங்குள்ள பம்பா கணபதியை வணங்கிவிட்டு, நீலிமலையில் ஏறுகின்றனர். இது பெருவழி பயணத்தில் நாம் சந்திக்கும் மூன்றாவது மலை. மலையேறும் இடத்தில், ராமர், அனுமன், பார்வதி சந்நிதிகளும், பந்தளராஜாவின் அறையும் உள்ளது. இந்த அறையில் பந்தளராஜாவின் வாரிசுகள் பக்தர்களுக்கு விபூதிபிரசாதம் தருகிறார்கள்.பத்து முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலை ஏற அனுமதிக்கப் படமாட்டார்கள்.